பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 95

பெற்றுள்ள ஒரு ஆட்டக்காரர்கூட, வேண்டுமென்றே எதிராளியை அடித்து வெளிப்படையாகத் தவறு செய்வதும் உண்டு. உள்நோக்குடன் (Intentional) செய்யப்படுகின்ற தவறென்பது பொதுவான தனியார் தவறுக்கும், ஆட்டக்காரரை ஆட்டத்தைவிட்டு வெளியேற்றுகின்ற (Disqualifying) தவறுக்கும் இடைப்பட்டதாகும். உள்நோக்குடன் வேண்டுமென்றே செய்யும் தவறை மீண்டும் தொடர்ந்து செய்பவர் ஆட்டத்தை விட்டே நீக்கப்படுவார்.

தண்டனை: எல்லா நேரங்களிலும் தவறிழைப்பவரின் மேல் தனியார் தவறு சுமத்தப்படுகிறது. அத்துடன்,

(அ) பந்தைக் குறிபார்த்து எறியாத ஒரு ஆட்டக்காரரின் மேல், தவறு இழைக்கப்படும் பொழுது தவறுக்குள்ளான குழுவுக்கு தவறு நடந்த இடத்திற்கருகில் உள்ள பக்கவாட்டின் எல்லைக்கு வெளியேயிருந்து பந்தை உள்ளெறியும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

தவறென்று அறிவித்த உடனேயே நடுவர்கள் தவறிழைத் தவரின் ஆடும் எண்ணை சைகை மூலம் குறிப்பாளருக்கு கூற வேண்டும். பிறகு, எல்லைக்கு வெளியேயிருந்து உள்ளெறியும் எதிராளிக்கு அவர் பந்தைக் கொடுப்பார்.

(ஆ) குறிபார்த்துப் பந்தை எறியும் பொழுது, ஒரு ஆட்டக்காரரால் தவறிழைக்கப்பட்டால்,

1. எறிவதில் அவர் வெற்றி பெற்றால், அந்த வெற்றி எண் கணக்கில் சேர்க்கப்படும். தனியாக தனிஎறி கிடையாது.

2. எறிவதில் வெற்றி பெறாது போனால், இரண்டு தனி எறிகள் அவருக்கு வழங்கப்படும்.

தவறென்று அறிவித்த உடனேயே, தவறிழைத்தவரின் ஆடும் எண்ணைக் குறிப்பாளருக்கு நடுவர் கூறிய பிறகு கடைக்கோட்டின் பின்னாலிருந்து பந்தை உள்ளெறியும் ஆட்டக்காரருக்குக் கொடுக்க வேண்டும். அல்லது தனி எறி கொடுத்தால், அதை எறியும் தனி.எறியாளரிடம் பந்தைக் கொடுக்க வேண்டும்.

(இ) தவறுக்காளானோர், வளையத்தில் பந்தை எறியும் முயற்சியில் வெற்றி பெற்ற நேரம் தவிர, உள்நோக்குடன் இழைக்கப் படும் எல்லாத் தவறுகளுக்கும் 2 தனி எறிகள் தண்டனையாக வழங்கப்படும். ஆடும் நேரத்தில் இரண்டாவது பகுதியிலுள்ள கடைசி 5 நிமிடங்களிலும் எல்லா நேரப் பகுதிகளிலும் எல்லாத் தனியார் தவறுகளும் உள்நோக்குடன் செய்ததாகவே கருதப்படும்.

(ஈ) ஆளைப் பிடித்தல் (Holding) பிடித்தல் என்பது எதிராளியுடன் மோதி உடல் தொடர்பு கொள்வதுடன் அவரது