பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 97

5. இரட்டைத் தவறும், பன்முறைத் தவறும்

இரட்டைத் தவறும், மற்றொரு தவறும் ஒரே சமயத்தில் இழைக்கப்படும்பொழுது, இரட்டைத் தவறுக்கு இரட்டைத் தவறில் கூறியபடியும், மற்றொரு தவறுக்கு மேலே உள்ள விதியில் கூறியுள்ளபடியும், தண்டிக்க வேண்டும். குற்றங்களை உரியவர் மேல் சுமத்தியபின், அதற்கானத் தண்டனைகளை நிறைவேற்றிய பின் இரட்டைத் தவறு என்ற நிலையே எழாதவாறு இருக்க, ஆட்டம் மறுபடியும் வழக்கம் போல் தொடங்கும்.

6. எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் தவறுகள்

GDG கூறப்பட்டுள்ள விதிகளில் இல்லாத நிலைகள் பல ஏற்படலாம். ஒரேநேரத்தில் ஏற்படுகின்ற தவறுகள் அல்லது தவறைத் தொடர்ந்து வருகிற நிலைப்பந்தின் நேரத்தில் இரட்டைத் தவறோ அல்லது பன்முறைத் தவறுகளோ நிகழலாம்.

இதுபோன்ற சூழ்நிலையில், பொதுவான நிலையை சமாளிக்க, கீழே தரப்பட்டுள்ள விதிகள், யாவும் நடுவர்களுக்காகக் கொடுக்கப் பட்டுள்ளன.

(அ) ஒவ்வொரு தவறுக்கும் ஒவ்வொரு முறையும் தவறு என்று குற்றம் சாட்ட வேண்டும்.

(ஆ) ஒரே மாதிரித் தவறுகளுக்குத் தண்டனை கொடுக்கப்பட வேண்டுமென்பது இரு குழுக்களுக்கும் பொருந்தும் என்றாலும், தண்டனையாக தனி எறிகளைத் தராமல், அருகாமையிலுள்ள வட்டத்தில் வைத்து பந்துக்காகத் தாவல் மூலம் ஆட்டத்தைத் தொடங்கி வைக்க வேண்டும்.

(இ) ஒரு குழுவுக்குக் கொடுத்தத் தண்டனைகள் போல (தவறாக என்றுதானே எண்ணிக்கொண்டு) மறு குழுவுக்கும் அதேபோல தந்து, முதல் குழு பெற்ற இழப்பை ஈடு செய்விக்க எண்ணுகிற

எண்ணத்தையும் செயலையும் கைவிட வேண்டும்.

எந்தவிதமான சூழ்நிலையிலும் இரண்டு தனி எறிகளுக்கு மேல் எறியும் வாய்ப்பையும், பிறகு அவர்களுக்குப் பந்தை உள்ளே இடும் வாய்ப்பையும் எந்தக் குழுவுக்கும் தரக்கூடாது. 7. வெற்றி எண்ணுக்காக எறியும் செயல்

ஒரு ஆட்டக்காரர் வளையத்தினுள் பந்தை எறியும் முயற்சியைத் தொடர்ந்த தன் செயலில், எதிராளியால் தவறு இழைக்கப்படுகிற பொழுதும், நடுவரின் விசிலுக்குப் பின்னும் அவரின் கையை விட்டுப்