பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. விளையாட்டில் விளைந்த

வெறித்தனம்


ளையாட்டில் விளைந்த வெறித்தனம் உலகெல்லாம் உணர்ந்து ஒதுதற்குரிய இறைவனே, 'அலகிலா விளையாட்டுடையான்' என்று கம்பர் அனுப. வித்துப் புகழ்ந்து பாடுகின்றர். ஆண்டவனே விளை யாட்டுப்பிள்ளையாகத் திகழும்போது, அவன் படைப்பில் உருவான ஆறறிவு படைத்த மக்கள் மட்டும் வாளா இருப் பார்களா ? நீர்வாழினம் நீந்தி விளையாடி மகிழ்கின்றது. பறவையினம் பறந்தோடிக் களிக்கின்றது. ஊர்வனவும் ஊர்ந்து உவகை. பெறுகிறது. ஊர்ந்து, நிமிர்ந்து, நடந்து ஒடி ஆடும் மனித இனம் மட்டும் விளையாடுவதற்கும் களிப்படைவதற்கும் விதி விலக்காக இருக்க முடியுமா ? விலங்கினத்திலிருந்து மனித இனம் பிரிந்ததிலிருந்தே மக்கள் கூட்டம் விளையாடி மகிழ்ந் திருக்கிறது என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. அதன் தொடக்கம்தான் வேட்டையாடுதல், வாழ்வுக்குப் பாதுகாப்பு என்று மிருகங்களைக் கொல்லப்போய்,