பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48


தெரியவில்லை என்று முட்டாள் பட்டம் கட்டுவதில் முனைவபர்கள் சிலர். ஒரே இடத்தில் ஓடாமல் நின்றால் எப்படித் தவறுகள் தெரியும் என்றும், நடுவர் பணம் வாங்கிக் கொண்டு குழிபறித்துவிட்டார் என்று பழிமேல் பழிகளைப் பொழிந்துகொண்டே போவாரும் உண்டு,

இத்தனைப் பேச்சுக்கும் ஏச்சுக்குமிடையில், மைதானத்திற்குள்ளே புகுந்து விடுகின்ற ரசிகர்கள்; நடுவர்களைத் தாக்கத் துடிக்கின்ற ஆட்டக்காரர்கள் எதிர்ப்பு மனுவைத் தரத் துடிக்கும் குழு மேலாளர்கள் எல்லாருமே விளையாட்டை வலுக்கட்டாயமாக வெறியாட்டத்திற்கே இட்டுச் சென்று. விடுகின்றனர். என்ன செய்வது?

பொறுப்புடனும் பொறுமையுடனும் பணியாற்றும் நடுவர்களின் நிலையைப் புரிந்து கொள்ளாமல், ஊரெங்கும் உலகமெங்கும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளைக் கேட்கும் பொழுதோ, நெஞ்சுநெகிழ்ந்துதான் போகின்றது. ஆட்டத்தைக் கண்காணிக்கின்ற பொழுது அடிபட்ட நடுவர்கள் உண்டு. மிதிபட்டவர்கள், வெறி நாய்கடளிம் சிக்கிய முயலைப் போல விரட்டப்பட்டவர்கள், பாதுகாப்பான அறை நோக்கிப் புதுப்புனலாக பாய்ந்தோடி தப்பியவர்கள், போலீசாரின் காவலுடன் போலீஸ் வண்டியிலேயே தமது வீட்டுக்குப் பயணம் செய்தவர்கள் உண்டு.

இவ்வாறெல்லாம் மற்றவர்கள் மத்தியிலே வேதனைப்படவும், அவமானப்படவும் நடுவர்கள் ஏன் வரவேண்டும் ? வேறு வேலையே அவர்களுக்கு இல்லையா? இதனை எண்ணிப் பார்ப்பவர்கள் இருந்தால், மேலே கூறிய வேதனை மிகுந்த நிகழ்ச்சிகளும் இழிவான சூழ்நிலைகளும் உருவாகியே இருக்காது.

பந்தாட்டத்தைக் க ட் டு ப் ப டு த் த வந்திருப்பவரே பந்தாடப்படுகிறா ர் என்றாலும், சில சமயங்களில் தமது உயிரையே இழக்கின்ற தருணமும் நிகழ்ந்து விடுகின்றன.