பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

என்றாலும், ஏன் நடுவர்களாக அவர்கள் வருகின்றார்க்ள் என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நடுவர்களாகப் பணியாற்ற வருகின்றவர்கள் எல்லாம், நல்லதோர் மாறாத அன்பால், மறையாத நேசத்தால். இருக்கின்ற தமது சொந்த அலுவல்கள் அத்தனையையும் விட்டுவிட்டுத்தான், இந்தப் பணியாற்ற வருகின்றார்கள்.

“பழி தம்மீது சுமத்தப்படும். பாராட்டோ எப்படியும் கிடைக்காது” என்று தெரிந்துதான் வருகின்றார்கள் என்றால், விளையாட்டின் மீது அவர்கள் கொண்டிருக்கும் விருப்பத்தால் தான் என்பதையும் நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

'வருமானம் அவர்களுக்கு வருகிறதே' என்று வாய் கிழியக் கேட்பவர்களும் இருக்கின்றார்கள். வருமானத்தை விட வருவதும் பெறுவதும் எல்லாம் அவமானமே தவிர, வேறல்ல. ஏதோ ஆறு அல்லது ஏழு ரூபாய் அவர்களுக்குக் கிடைக்கிறது என்றால், அது அவர்களின் பணிக்காகக் கிடைக்கும் கூலியல்ல. “விலைமதிக்க முடியாத அவரது பணியை மதிக்கிறோம். துதிக்கிறோம்' என்று ஆட்டத்தை நடத்துவோர் காட்டும் அன்புக்கும் நன்றிக்கும் அடையாளமே தவிர, அது கூலியோ சம்பளமோ அல்ல.

அவரது தூய தொண்டிற்கு விலையே கிடையாது என்றால், வெறும் வருமானம் கருதியா இந்த வேலைக்கு வருகின்றர்கள் ?... இல்லை... இல்லவே இல்லை

நடுவர்களின் பணி அவ்வளவு எளிதில் கிடைத்துவிடும் வேலையல்ல. அதைப் பெறுவதற்குள் அவர்கள் எவ்வளவு சோதனைகளையும் தேர்வுகளையும் தாங்கிக் கொள்ளவேண்டும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

பந்தாட்ட விதிகள் அத்தனையையும் பரிபூரணமாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தேர்விலே தெளிவாக

வி. வி.-4