பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

இவ்வாறு ஆட்டக்காரர்கள் திட்டமிட்டுத் தவறிழைக்கும் பொழுது, அது நடுவர் பார்வையில் படாமலும் இருக்கும்: அதே சமயத்தில், அருகில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பவர்களுக்குத் தெரிந்த காட்சியாகவும் இருக்கும். இதனால், இதை வேண்டுமென்றே நடுவர் விட்டுவிட்டு, தங்கள் அபிமான ஆட்டக்காரர்களைத் தோற்கடிக்க முயல்கிறர் என்ற தப்பெண்ணத்தில் திளைப்பவர்களும் உண்டு, இங்கே தான், குதூகலம் கொள்ளவேண்டிய நெஞ்சமெலாம் குழப்பத்திற்கு வழிகாட்டும் காட்டாறாகப் பெருக்கெடுத் தோடத் தொடங்கி விடுகிறது.

ஆட இருக்கின்ற 90 நிமிடங்களுக்குள்ளே 9 அல்லது 10 மைல்களுக்குமேல் நடுவர் ஒடியாடிக் கடமை ஆற்றும் பொழுது, குறைபாடு நிகழ்வது சகஜமே! குறை ஏற்படுவது வரவேற்கத் தக்கதா என்றால், வருந்தத்தக்கதுதான். என்றாலும் தன் திறமை, அனுபவம் முழுமையுமே வெளிப்படுத்தித்தான் நடுவர் பணியாற்றுகின்றார் என்பதையே இன்றுவரை விளையாட்டுலகம் ஒத்துக்கொண்டுதான் இருக்கிறது.

எனவே, சூழ்நிலையை உணர்ந்து பாராது, சுற்றி அமர்ந்து கொண்டிருக்கும் ரசிகர்கள். சூறாவளியெனக் கிளம்பி, மைதானத்திற்குள் நுழைவதும், மனதுக்கு விரும்பாத நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதும் விளையாடுத்துறை வளர்ச்சியை பாதிப்பதுடன், மறுமலர்ச்சிக்குரிய பாதையையும் அடைத்தே விடுகின்றது,

விளையாட்டுத்துறை வளரவேண்டும் என்று விரும்புகிற அத்தனை பேரும், நடுவரைப் போற்றி ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். விளையாட்டுத் கலையில் நடுவர்களின் நிலை இனிமையாக இருந்தால்தான் ஆடுவோருக்கும், ஆட்டத்தின் ரசிகர்களுக்கும் இன்பமாக இருக்கும்.