பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

ஆண்கள் முதலில் முழுக்கால் சட்டை. முழுக்கையுள்ள சட்டை அணிந்தே ஆடவேண்டும் என்றிருந்தது. கொஞ்சங் கொஞ்சமாக முழுக்கை சட்டை, அரைக்கால் சட்டை, என்று மாறி கடை சியில் அரைக்கால் சட்டை, கையுள்ள பனியன் என்று இறுதியில் மாறி வந்துவிட்டது.

ஆண் பெண் என்று ஒரு குழுவில் இணைந்தாடும் ஆட்டத்தில் ஆரம்ப காலத்தில் பெண்களைப் போலவே ஆண்களும், தரை கூட்டும் ஆடை அணிந்தது மட்டுமல்ல, பெண்களைப் போலவே உடை யணிந்து தூக்கியவாறு ஆடினர். காரணம் என்ன வென்றால் அப்பொழுதுதான் பெண்களுக்கும் ஆட சம வாய்ப்பு ஏற்றாற்போல் இருக்கும் என்பதால்தான்.

டென்னிஸ் ஆட்டம் ஆரம்ப காலத்தில் புல் தரையில் ஆடப்பெற்றது. புல் தரையிலிருந்து மணல் தரைக்கு மாறி, மணல் தரையிலிருந்து களிமண் பூமிக்கு வந்து, அதிலிருந்து சிமிண்டு தரைக்குமாறி ஆடுகளத்தின் அமைப்பு முன்னேறி வந்துவிட்டது. அத்துடன் கருங்காரை மண் வைத்தும், பலகைகளை அமைத்தும் ஆடுகளம் அமைத்து விளையாட்டில் விறுவிறுப்பைப் பெருக்கி மகிழ்ந்தனர்.

இவ்வாறு ஆளுக்கொரு விதியும் ஊருக்கொரு அமைப்புமாக ஆடப்பெற்ற டென்னிஸ் ஆட்டத்தைச் செழுமைப் படுத்தி, செம்மையானதாக ஆக்க இங்கிலாந்தில் இருந்த. மெரிலிபோன் சங்கம் முன் வந்தது முழுமையான ஆட்ட விதிகளுடன் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தியது அதன் பின்னர்தான் இப்பொழுது பிரபலமாக விளங்கும் விம்பிள்டன் டென்னிஸ் பந்தயப் போட்டி 1877ஆம் தொடங்கப்பெற்றது.

இங்கிலாந்தைப் போலவே அமெரிக்காவும் டென்னிஸ் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டிருக்கிறது. டேவிஸ்.