பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77


தன்னையே அர்ச்சிக்கத்தான் இருந்ததாகக் கூறுகின்றார் சித்தர். ஆமாம், அறிவும் செல்வமும், ஆயிரம் ஆயிரமான சேவகரும் ஒருவருக்கிருந்து என்ன பயன் ? நோயிலே விழுந்து, பாயிலே புரண்டு, வாய் புலம்பி வழி கலங்கி, மனம் வதங்கிக் கிடப்பவனிடம், என்ன இன்பத்தைக் காண முடியும் ? அவனால் பிறருக்கு என்னதான் பயன் கிடைத்து விடும் ? பழந்தமிழ் மற்றும் பிற நாட்டு இலக்கியங்களனைத்தையும் படிக்கப் புகுங்கால், ஆயிரமாயிரம் தெய்வங்கள் இருப்ப தாகவே நாம் அறிந்து கொள்கிறோம். அத்தனை தெய்வங்களை ஏன் மக்கள் கொண்டிருக்கின்றார்கள் என்பதை ஆராயும் போது, மனிதருக்குத் தேவைப்படும் அத்தனை பொருட்களும், தெய்வங்களாக அல்லவா போற்றப்பட்டிருக்கின்றன. ஏற்றப் பட்டிருக்கின்றன. உணவு சமைக்க உதவிய நெருப்பு ஊரை எரித்தபோது, தாகம் தீர்த்தத் தண்ணீர் வெள்ளமாகப் பெருகி வழியை அழித்தபோது, வாழ உதவும் காற்று வன்புயலாக மாறி அடித்தபோது, குளிரோட்டிய பரிதி, கொடும் அனலாக எரித்தபோது, வாழ்த்திய மக்கள் பயத்தால் வணங்கினர். பயன்பட்டபோது வாழ்த்தினர். பயந்தபோது 'காத்தருள வேண்டும்' என்று கைகூப்பி வணங்கினர். அதனால் தான் சூரியபகவான், சந்திரன், வாயுபகவான், வருண பகவான். கங்காதேவி, பூமாதேவி என்றெல்லாம் வணக்கத்திற்குரிய தெய்வங்களாக மாறின. எல்லோருக்கும் கண்கண்ட கடவுள்களாக மாறின. நம் உடல் மட்டும் எந்த வகையில் குறைந்து போய் விட்டது என்று நினைக்கின்றீர்கள் ? போற்றி வாழ்கின்ற வரையில் பொன்னையும், பொருளையும், புகழையும் வாரி வழங்குகின்ற உடல்தான், புண்ணும் நோயும் பெற்ற பிறகு எதை வாங்கித் தருகிறது என்றுதான் நமக்கு நன்றாகத்