பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78


தெரியுமே. காற்றாலும், கனலாலும், நீராலும், நிணத்தாலும் போன்ற ஐப் பூதங்களால் ஆக்கப்பட்டிருக்கும் உடல்தான், ஆக்க சக்தி அத்தனைக்கும் அருங்களமாக அன்னை மடியாக விளங்கி வருகிறது. பயன்தந்த அத்தனை பொருட்களையும். நாம் வாழ்த்தி வணங்குகிறோம் என்றால், உலகில் வாழ உதவும் ஒப்பற்ற உடலும், ஒராயிரமுறை நாம் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்ற நமது உடலும் ஓர் தெய்வந்தானே ! உடலுக்குள் ஓடி.விளையாடும் உயிர்க்காற்று இருக்கும் வரை தான் உடல் செழிக்கும். உள்மனம் தழைக்கும். உறவினம் அழைக்கும். அறிவு முழக்கும். ஆன்மாவும் பிழைக்கும். இத்தனைக் காரியங்களுக்கும் காரணமாக விளங்கிப் பயன்பட்டு. நம்மை பயப்படுத்தி வாழும் உடலை, எந்திரம்போல இயக்கி, ஏவலர் போல இகழ்ந்து விட்டு வாழ்ந்துவிடலாம் என்று வாழமுற்பட்டால், அது வாழ்க்கை யில் சேராது. பழகிவிட்டதனாலேயே, நாம் எப்படியும் பழகி விடக்கூடாது என்று பாம்பையும் நெருப்பையும் சிங்கத்தை யும், ஆள்கின்ற அரசையும் காட்டிப் பயமுறுத்துவதுபோல வாடிச் செல்கின்ற ஒர் பழம்பாடல். அதேபோல நமக்குக் கிடைத்திருக்கின்ற உடலும் நம்மையெல்லாம் நல்லுகத்திற்கு அழைத்துச் செல்லும் நயமான தெய்வமாகும். வாழ்த்தியோர், வணங்கியோர் வாழ்வுபெற்றார்கள், வன்முறையால் தாக்கிப் பேசியோர்கள் வாழ்விழந்து வழியொடுங்கி வீழ்ந்தார்கள். தெய்வம் போற்றித் திருவாழ்வைப் பெறுவோம். செல்லும் வழியில் சீரிய நலமெலாம் பெற்று, உயர்ந்த நிலையை அடைவோம் !