பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84


தான் நடந்திருக்கிறது, விளையாட்டு என்றாலே உணர்ச்சி யான செயலுக்காகத்தானே ! எதுவும், எப்பொழுதும், எப்படியும் நிகழும் என்ற உலக இயல்புக்கு ஏற்பவே ஆடு களமும் அமைந்திருக்கிறது. 1964ஆம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் பந்தயம் நடந்தது. அதில் பங்குபெற வீராஒசாலினோ' எனும் வீராங் கனை ரஷ்யா நாட்டிலிருந்து வந்திருந்தார். அவர் 1960ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் வேலெறியும் போட்டியில், தங்கப்பதக்கம் பெற்றவர். இந்தப்போட்டியிலும் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் தான் வந்திருந்தார். ஆனால் நடந்தது வேறு ! அவர் 5-வது இடத்தையே அடைந்தார். அந்த அவமானத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பந்தயக் களத்தைவிட்டு வேகமாக ஓடினார் ! எங்கே ! முடி அழகு திருத்த நிலையத்திற்குத்தான் ! தன் கருங்கூந்தல் அனைத்தையும் களைந்தெறிவதற்குத்தான் ! மொட்டை அடித்துக்கொண்டால் பட்ட வேதனை குறையுமோ என்னமோ தெரியவில்லை. இவ்வாறு, விளையாட்டுக்களில் விநோதங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. என்றாலும் நாம் விளையாட்டில் ஈடுபட்டு மகிழ்கிறோம். நமக்குத் தேவை இன்பந்தானே !