பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91


ஆகவேதான், இன்றைய நிலையில் தேவையானது உடற் கல்வியின் உற்ற துணையே. சுவரை வைத்தே சித்திரம். பாதை அமைத்த பின்னே பயணம். உடலை வைத்தே உயிர்ப் பாதுகாப்பு. நல்ல மக்களை நலமுள்ள வலியுள்ள வீரர்களைப் பெற்ற பின்பே நாட்டின் பாதுகாப்புக்கு முயற்சி. உடல் வலிவற்றவர்களுக்குப் போர் பயிற்சி உபயோக மற்றது. கோழையின் கையில் படையும், குர ங்கின் கையில் கொள்ளியும் எவ்வாறு ஆபத்தை விளைக்குமோ அதே நிலை தான் நலிந்தவர்களுக்கு இராணுவப் பயிற்சி. எனவேதான், உடலைத் திறநிலைக் குக் கொண்டு வரவும். உள்ளத்தைப் பக்குவப்படுத்தி விரிந்த நோக்கத்தை உண்டாக்கவும், ஒற்றுமை, கூட்டுறவு, தன்னம்பிக்கை பொதுநலப் பணி முதலிய பண்புகளைப் பெறவும் உதவுகின்ற உடற் கல்வியை செழிப்புள்ளதாக்கி, அதன் மூலம் சிறந்த மக்களைப் பெற்று நாட்டையும் நாட்டு மக்களையும், காப்பது அரசினர் கடமை. - உலகம் போற்றுகின்ற உயர்ந்த கல்வியை, உயர்ந்த குறிக்கோளைப் பெற்று இலங்குகின்ற சிறந்த கல்வியை, குடியரசின் நோக்கத்தை நடைமுறையில் மறைமுகமாக செய்து வருகின்ற ஒப்பற்ற கல்வியை. அதன் பெருமையை போற்றுவதோடு நில்லாமல். அதன் வளர்ச்சிக்கு வாழ் வமைத்து வழியமைத்துத் தருவது நாட்டுப் பற்றுள்ள ஒவ்வொருவரின் கடமையாகும். o