பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


பட்டமரம் நிழல்தருமோ ! திரிந்து போன பால் தனிலே தயிர்வருமோ ! சேற்றில் வீழ்ந்து விட்டமலர் மணந்தருமோ ! எண்ணெய் தீர்ந்த விளக்கினிலே ஒளிவருமோ !! வெம்பி வீழ்ந்து கெட்டகனி சுவைதருமோ ! கிடையா தென்றால் கீழாக்கிப் பாழாக்கும் நோய்க்குள் வீழ்ந்து விட்டஉடல் வாழ்வினிலே தருவதென்ன ? விளையாட்டே உடல்காக்கும் ! உணர்வார் யாரோ? காவிரியின் பசுமையெல்லாம் நீரோட்டத்தால் ! கற்பனையின் இசைவெல்லாம் கண்ணோட்டத்தால் ! பூவிரிக்கும் புதுமையெல்லாம் தேனூட்டத்தால் ! பொன்விரிக்கும் பெருமையெல்லாம் மண்ணூட்டத்தால் ! பாவிரிக்கும் இனிமையெல்லாம் சொல்லூட்டத்தால் ! பயன்விளக்கம் செயல்எல்லாம் பண்பூட்டத்தால் ! நாவிரிக்கும் நன்மையெல்லாம் விளையாட்டாலே ! நல்லமைதி வாழ்வூட்டும் உடல் ஊட்டத்தால் ! காற்றென்றால் உயிர்காக்கும் மூச்சாய் நின்று ! கனியென்றால் பசிதீர்க்கும் உணவாய் சென்று !ஊற்றென்றால் துயர்போக்கும் தாகம் வென்று ! உரமென்றால் பயிர்வளர்க்கும் உள்ளாய் நின்று ! நேற்றின்று நாளையென நினைவில் கொண்டு நிலையான நல்வாழ்வை மக்கட் கீய தோற்றந்தான் கொண்டதுவே விளையாட் டெல்லாம் ! தொட்டார்க்கும் தொடர்ந்தார்க்கும் சொர்க்கம்ஈதே ! எஸ். கவராஜ் செல்லையா