பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 விளையாட்டுக்களில் வினாடி வினா விடை

கி.பி. 394ல் பந்தயங்களை நடத்தவிடாமல் நிறுத்தித் தடுத்தவர் அப்பொழுது ரோம் சாம்ராஜ்யத்தை ஆண்ட சக்கரவர்த்தி தியோடோசியஸ். 75. பழைய ஒலிம்பிக் பந்தயம் முதன் முதலாக எப்பொழுது தொடங்கப்பெற்றது? கி.மு. 776ல். (இதனை சிலர் கி.மு. 1258 என்றும், கி.மு. 884 என்றும் கூறுகின்ற கருத்து பேதங்களும் உண்டு). 76. பழைய ஒலிம்பிக் பந்தயங்கள் எத்தனை நாட்கள் நடந்து வந்தன? 5 நாட்கள் 77. கி.மு. 776ல் நடந்த முதல் ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்ற முதல் வீரன் யார்? அவரது தொழில் என்ன? கரோபஸ். அவரது தொழில் சமையல். 78. 100 மீட்டர் ஓட்டத்தை முதன் முதலில் 10 வினாடிகளில் ஒடி புதிய சாதனையை ஏற்படுத்தியவர் யார்? ஆர்மின் ஹேரி என்பவர் (Armin Hary) 79. இந்திய வீரர்களில் யாராவது ஒரு வீரர் எப்பொழுதாவது ஒலிம்பிக் பந்தயங்களில் வெற்றி பெற்று பதக்கங்கள் பெற்றிருக்கிறாரா? ஒரே ஒருமுறை. 1900ம் ஆண்டு நார்மன் பிரிட்சர்ட் (Norman Pritchard) என்பவர். 200 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் பரிசு பெற்றிருக்கிறார். க்ல்கத்தாவிலே பிறந்த இவர் இங்கிலாந்திலே குடியேறிவிட்டார். 80. உலகக் கால்பந்தாட்டப் போட்டியில், அதிக முறை வெற்றி பெற்ற நாடு எது? பிரேசில் மூன்று முறை வெற்றி பெற்றிருக்கிறது. 1958, 1962,