பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t=T*=ī 6Ido-5ou Tå:93*6”otuI 19 1970. - 81. கால்பந்தாட்ட வீரர் பீலி'யின் வெற்றி சாதனை (Record) என்ன? 18 ஆண்டுகள் முதல் தர கால்பந்தாட்டப் போட்டியில் க 蠶 கொண்டு, 1254 ஆட்டங்கள் ஆடி 1216 வெற்றி எண்கள் (Goal) எடுத்திருக்கிறார். 82. - பீலிக்குப் பிறகு சிறந்த ஆட்டக்காரர் என்று கருதப்படுபவர் யார்? ஹாலந்து நாட்டைச் சேர்ந்த ஜோகன்க்ரப் (Johen Gruff). 83. குறிக் கம்புகளைத் (Stump) தட்டி விட்டு, ஆட்டக் காரரை ஆட்மிழக்கச் செய்யும் போது (Stumping) விக்கெட் காப்பாளர் கையில் பந்து இருக்க வேண்டியது அவசியமா? ஆமாம்! பந்தை கையில் வைத்துக் கொண்டுதான் குறிக் கம்புகளைத் தட்டிவிட வேண்டும். பந்தில்லாமல் விக்கெட்டை வீழ்த்தினால், அது முறையல்ல. ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 84. ஒரு டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில், எதிர்க் குழுவைச் சேர்ந்த 10 ஆட்டக்காரர்களையும் (விக்கெட்) ஆட்டமிழக்கச் செய்தவர் யார்? எங்கே? 1956ம் ஆண்டு, மான்செஸ்டரில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் ஜிம்லேக்கர் (Jimlaker) என்ப்வர் செய்த பெரிய சாதனை. 85. டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட நேரம் விளையாடியவர் என்ற பெயர் பெற்ற ஆட்டக்காரர் யார்? அவரது சாதனை என்ன? ஹனிப் முகமது என்ற பாகிஸ்தானிய ஆட்டக்காரர். அவர் விளையாடிய நேரம் 16 மணி 10 நிமிடங்கள். ஆடிய இடம் பிரிட்ஜ் டவுன். பாகிஸ்தானுக்கும் மேற்கிந்தியத் தீவுக்கும் நடந்த போட்டியின் போது அவர் எடுத்த ஓட்டங்கள் 337 ஆகும். 86. - ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா எப்போதாவது