பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை விரிந்த மலர்தொறும் பறந்து சென்று அமர்ந்து, விரும்பிய தேனை நுகர்ந்து சேகரிக்கும் தேனிபோல, வேறுபல நூல்களுக்குக் குறிப்பெடுப்பதற்காகத் திரிந்து, நான் திறந்த விளையாட்டுத்துறை நூல்களில் எல்லாம் வீறு பெற்றுத் தோன்றிய பல சுவையான நிகழ்ச்சிகைள அவ்வப்போது கண்டேன். குறித்துக் கொண்டேன். விளையாட்டுக்களிலே வீரர்களும் வீராங்கனைகளும், வேட்கை கொண்டவர்களும் பதித்துச் சென்ற சாதனைகள், பலகாலம் பெற்ற சோதனைகள், விளையாட்டில் மயங்கிக் கிடந்த மன்னர்கள், இராணிகள், செல்வந்தர்கள், அவர்கள் சிந்திச் சென்ற குறிப்புக்கள் அனைத்தையும் சேகரித்து, இன்று வினா விடையாகத் தொகுத்துத் தந்திருக்கிறேன். விளையாட்டு நிகழ்ச்சிகளை எல்லாம் விளையாடும் இயக்கங்களிலே நேரே கண்டும், வானொலியிலே கேட்டும் செய்தித்தாள்களிலே படித்துச் சுவைக்கும் அன்பர்கள் இந்நூலில் உள்ள வினாக்களை ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்ள, ஒருவர் பதில் சொல்ல முடியாதபோது திகைத்துத் துள்ள, இவ்வாறு கூடும் போதெல்லாம் கேட்டு மகிழ வாய்ப்புத் தரும் வண்ணம் வினாக்களைத் தந்துள்ளேன். வினாவை முதலில் படியுங்கள். உடனே பதில் தெரிந்தால் சொல்லிப் பாருங்கள். தெரியவில்லை என்றால் சற்று நேசம் சிந்தனை செய்து கூறுங்கள். இல்லையேல்...! ஏன் மூளையைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து முனகுபவர்களும் சிலர் உளர். அவர்களுக்காகவும் சேர்த்து, பெறும் சிரமத்தைக் குறைக்கும் பொருட்டு, வினாவுக்குக் கீழேயே விடையையும்