பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-тši-i srdio pour: oscosoevuum , 49 1980ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் தாண்டினார். தற்போது கியூபா நாட்டினர் ஜே. சாட்டோ மேயர். இவரின் உலக சாதனை உயரம் 2.45 மீட்டர். 264. உலக டென்னிஸ் போட்டிக்குரிய டேவிஸ் கோப்பையை இதுவரை வென்றுள்ள நாடுகளைக் கூறுக? அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்சு, தென் ஆப்பிரிக்கா. 265. முதன்முதல் கிராண்ட் ஸ்லாம் (Grand Slam) விருதினைப் பெற்ற டென்னிஸ் வீரர் யார்? டான் பட்ஜ் (Don Budge) 1938ம் ஆண்டு அவர் இந்த விருதினைப் பெற்றார். 266. அமெரிக்க நாட்டிற்கு டென்னிஸ் ஆட்டத்தைக் கொண்டு வந்தவர் யார்? எந்த ஆண்டு? குமாரி மேரி அவுட்டர் பிரிட்ஜ் (Miss Mary Outer Bridge) நியூயார்க்கைச் சேர்ந்தவர். இங்கிலாந்திலிருந்து கொண்டு வந்த ஆண்டு 1874. - 267. டென்னிஸ் ஆட்டத்தில் பயன்படும் உலோக - ராக்கெட்டை (Steel Racket) கண்டு பிடித்தவர் யார்? எந்த ஆண்டு? ரானே லக்கோஸ்டி (Rane Lacoste) எனும் பிரெஞ்சுக் காரர். அவர் கண்டு பிடித்த ஆண்டு 1960. 268. 1975ம் ஆண்டின் விம்பிள்டன் வெற்றி வீரரான ஆர்தர் ஆஷ் (Arther Ashe) அடித்த பந்தின் வேகம் எவ்வளவு? மணிக்கு 120 மைல் வேகம் என்று கணக்கிட்டிருக்கின்றனர். 269. முதல்முறையாக இந்தியா வளைகோல் பந்தாட்டத்தில் எந்த ஆண்டுதோற்றது? யாரிடம்?