பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



21


கிரிக்கெட்' என்ற உச்சரிப்புடன் மாற்றி, ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்றும், இதிலிருந்து, பிரான்சு தேசமே கிரிக்கெட் ஆட்டத்தை உருவாக்கியிருக்க லாம் என்பதற்கு போதிய சான்று பகர்வதை நாம் புரிந்து கொள்ளலாம் என்று முழக்குவோரும் உண்டு.

இங்கிலாந்தில் கிரிக்கெட்ஆட்டம் சிறந்ததொரு இடத்தைப் பெற்று, மக்கள் மத்தியிலே பவனி வந்த நேரத்திலே, பிரான்சு நாட்டில் கிரிக்கெட் பற்றியே தெரிந்திருக்கவில்லை என்ற மறுப்புடன் ஒரு சிலர் கூறுகின்ருர்கள்.

1478ம் ஆண்டுவரை, கிராகட் என்ற சொல், பிரெஞ்சு மொழியில் தோற்றமடையவோ, இடம் பெறவோ இல்லை என்றும், 1478ம் ஆண்டுக்குப் பிறகே, இங்கிலாந்தில் ஆடப்பெற்ற இந்த ஆட் டத்தை விளக்கிக்கூறவே, இச்சொல் பிரெஞ்சு மொழியில் தோன்றியது என்பதும் சில சரித்திர ஆசிரியர்களின் கருத்தாகும்.

மேற்கூறியகருத்தினை வலியுறுத்திக்கூறும் வல்லு நர்களுக்கு, இங்கிலாந்தில் எப்போது கிரிக்கெட் தோன்றியது, எங்கு எப்பொழுது விளையாடப்பட் டது என்பன போன்ற குறிப்புக்களுக்கு ஆதாரம் காட்ட இயலவில்லை. ஆனாலும் சரித்திரக் குறிப்புக் கள் ஆங்காங்கே தலை காட்டத்தான் செய்கின்றன.