பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

 சொல்லுக்கு அர்த்தமாக தடி' அதாவது கிரிக்கெட் ஆட்டத்தில் பையன்கள் ஆடப்பயன்படும் வளைந்த தடி' என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எனவே, ஆரம்ப காலத்தில் வளைந்த தடியாகத் தொடங்கியதே இன்று 4: அங்குலம் அகலமுள்ள மட்டையாகப் பரிணமித்திருக்கிறது. அது கிரிசி யாக இருக்கலாம் அல்லது கிராசியாக இருக்கலாம் அல்லது கிராகட்டாகவும் இருக்கலாம்.

ஒன்றின் தொடர்பாக ஒன்று தொடங்கி, வளர்ந்து இன்று இந்தப்பெயரைப் பெற்றிருக் கிறது என்றுதான் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

6. விக்கெட் (Wicket)


ஒரு பக்கத்தில் இருந்து பந்தெறிபவருக்கும், மறுபுறத்தில் அந்தப் பந்தைத் தடுத்து ஆடு வோருக்கும் பக்கமாக ஒவ்வொரு விக்கெட் இருப் பதை நாம் அறிவோம்.

ஆரம்ப காலத்தில், பந்தை எறிபவருக்கு (Bowl) ஒரு எல்லை அளவு மட்டுமே உண்டு. பந்தைத் தடுத்து அடித்தாடுபவருக்கு (Batsman)பின்புறம் ஒரு சிறு குழி (Hole) மட்டுமே உண்டு. அதன் அருகில்