பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



42


கோளிலும், மறுப்புக்கள் கொண்ட அமைப்பி லும் ஒன்றையே அனைவரும் ஒத்துக் கொண்டிருக கின்றனர்.

அதுதான் பில்லி என்ற பிரெஞ்சுச் சொல் லுக்கு நீண்ட குச்சி என்றும், நீண்ட குச்சியால் பந்தைத் தள்ளி ஆடுவதால் இந்த ஆட்டம் பிலி யர்ட்ஸ் என்ற பெயரினைப்பெற்றிருக்கிறது என்றும், அவர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டிருப்பதை நாமும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிருேம்.

12. கோல்ஃப் (Golf)

கோல்ஃப் என்ற ஆட்டம், பல ஆட்டங்களி லிருந்து பிரிந்து வந்து, பிறகு தனியாகத் தோன்றி யிருக்கலாம் என்று அபிப்ராயப்பட்ட பல்வேறு நாட்டு சரித்திர ஆசிரியர்கள், அதற்கேற்ற முறை யில், பலநாடுகளில், பழங்காலத்தில் ஆடிவந்த இதே வகையான சில விளையாட்டுக்களை வகைப்படுத்திக் காட்டியிருக்கின்ருர்கள்.

ரோமானியர்கள் ஆட்சிக் காலத்தில், பகானிகா (Paganica) என்ற ஒரு ஆட்டம், வளைந்த தடி ஒன்றி னுல், தோல் பைக்குள் இறகுகள் அடைத்துத் தைக்கப்பட்டு உருவாக்கிய பந்தினைக் கொண்டு