பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

 1862ம் ஆண்டு, மணிப்பூரைச் சேர்ந்த குதிரை iான் ஒருவன், பஞ்சாப் நகரத்தைச் சுற்றிப் பார்ப் பதற்காக வருகிருன். அங்கே தங்கியிருந்த ஆங்கில இராணுவ அதிகாரிகளுக்கு முன்னே, குதிரை மீதேறி லெ சாகச வித்தைகளைக் காட்டுவதற்கு அவனுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

அவன் முரட்டுத்தனமாகக் குதிரை மீது ஏறி, அங்கும் இங்கும் அம்பெனப் பாய்ந்து, காற்றெனக் கடுகிச் சென்று ஒட்டிக் காட்டுகிருன். அத்துடன் நில்லாது, தனது குதிரையின் மீது புயலெனப் பாய்ந்து செல்லும்பொழுதே, கீழே கிடக்கும் பொருள் ஒன்றைத் தன் கையில் உள்ள கம்பினல் குறி தவருமல் அடித்துக் காட்டுகிருன்.

கீழே கிடந்த பொருள் ஒரு பந்தாகும். அந்தச் ரிய பந்தைத் தான், குதிரை வீரன் குறி தவருமல் அங்குமிங்கும் அடித்துக் காண்பிக்கிருன். அவன் செய்த சாகச வேலைகளைவிட, இந்தப் பந்தை அடித்த காட்சியே, அதிகாரிகளே அதிகம் கவர் கிறது.

கீழே கிடக்கும் உருண்டைப் பொருளைப் ார்த்து அது என்ன என்று மொழி பெயர்ப்பாளர் முலம் கேட்கிருர்கள். மணிப்பூர் இளைஞன் P ய | ய ன் கிருன். அந்தப் பந்தின் பெயர் புலு என்ப 1, 11 ('り ம் o அது, எளிதில் வளைந்து கொடுக்கும் இயல்புள்ள வல்லோ என்ற மரத்தின் வேரிலிருந்து தயார்