பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



62


அரசனின் ஆடுமாடுகள் அடங்கிய நிரைகளைக் கவர்ந்து வரச் சொல்வது வழக்கம்.

இவ்வாறு எதிரி அரசனின் நிரைகளைக் கவர்ந்து வருவதை வெட்சி என்பார்கள். கவர்ந்து சென்ற நிறைகளை மீட்டுக் கொண்டு வருவதை கரந்தை என்பார்கள்.

நிரைகளைக் கவர வரும்போது, அல்லது நிறைகளை மீட்கப் போகும் போது நிச்சயம் போர் நிகழத்தான் செய்யும். அவ்வாறு நிகழ்கின்ற போரில், தங்களுக்கே வெற்றி கிடைக்க வேண்டும் என்று காளிதேவிக்குப் பலி கொடுப்பார்கள் விரர்கள்.

அதுவே பலி சடுகுடு என்று மாறி மருவி வந்திருக்கலாம்.

வெட்சி வீரர்கள் ஒருபுறம். கரந்தை வீரர்கள் மறுபுறம். எதிரெதிராக நிற்கும் அவர்கள், ஒருவரை ஒருவர் விரட்ட, எதிர்க்க, மடக்க, பிடித்து நிறுத்த, மற்றவர் திமிறிக் கொண்டு செல்லப் போரிடும் முறை போலவே சடுகுடு ஆட்டமும் அமைந்திருப்பது கண்கூடு.

போர் நிகழ்ச்சிகள் தான் தற்கால விளையாட்டுகளுக்கு முன்னேடிகளாக அமைந்திருந்தன என் பதை இன்றும் நிாம் அனுபவத்தால் அறியலாம்.