பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

 கல்லின் மேல் உட்கார்ந்து சண்டை போடச் செய்தான் தீசியஸ். ரோமானியர்கள் சண்டை போட ஒரு வட்டம் போட்டார்கள். அந்த வட்டத் திற்குள்ளே இருந்து தான் சண்டை போட வேண்டுமென்று வற்புறுத்தினர்கள். கட்டாயப் படுத்தினார்கள். அவ்வாறு சண்டை போடும் அந்த இடத்திற்கு 'ரிங்' (Ring) என்றும் அழைத்தனர்.

பல நூற்ருண்டுகளுக்குப் பிறகு, 1865ம் ஆண்டு, கியூன்ஸ் பெரி அமைத்த புதிய விதிகளின் படியே, குத்துச் சண்டை மேடை 24 அடி சதுரமுள்ள மேடையாக அமைந்தது. என்றாலும் அ ந் த மேடைக்கு ரிங் என்று ரோமானியர் அழைத்த பெயர் மாறவே இல்லை.

பழைய ஒலிம்பிக் பந்தயத் திலும், பங்கராசியம் (Pancratium) என்ற போட்டியானது, குத்துச் சண்டையும் மல்யுத்தமும் கலந்த ஒன்றாக இருந்திருக்கிறது. இந்த Ring என்ற சொல், ரோமானியர்களின் வழக்கத்திற்குப் பிறகே வந்து, அப்படியே தங்கி விட்டது.

23. டக் ஆப் வார் (Tug of war)

போர்க்களங்களின் நினைவிலேயே பொழுதைக் கழித்த கிரேக்க வீரர்களிடையே புத்துணர்ச்சியைப்