பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
99

தடியாகவும் இருக்க வேண்டும். மற்றவர்கள் கண்ணுக்குப் பளிச்சென்றுத் தெரியும் படியான எந்த வண்ணத்திலும் இது அமைந்திருக்கலாம். இதன் நீளம் 30 செ.மீ (11.81") சுற்றளவு 12 செ. மீக்கு மேல் 13 செ.மீ க்குள் (4.724"). இதன் கனம் 50 கிராம்.

7. ஓட்டப்பாதை (Course)

நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் உடலாளர்கள் ஓடிச் செல்லும் ஓட்டப் பாதையைக்குறிக்கும் சொல்லாக இது பயன்படுகிறது. நீண்ட தூர காடுமலை ஓட்டப் போட்டி கடற்கரை ஓட்டப்போட்டி மற்றும் படகுப்போட்டி இவற்றில் குறித்துக் காட்டப்படும் ஓடும் வழியே இவ்வாறு குறிக்கப்படுகிறது.

8.குறுக்குச்குச்சி(Cross bar)

உயரம் தாண்டல் மற்றும் கோலூன்றித் தாண்டல் நிகழ்ச்சியில் பயன்படும் இந்தக் குறுக்குக்குச்சி, மரத்தால் அல்லது மற்றும் எடை குறைந்த உலோகம் ஒன்றினால் உருண்டை வடிவமாக அல்லது முக்கோண வடிவமாக அமைக்கப்பட்டிருக்கும். இதன் நீளம் 3.98 மீட்டரிலிருந்து 4.02 மீட்டர் வரை இருக்கலாம் . இதன் அதிகப்படியான கனம் 2 கிலோ கிராமுக்குள் இருக்க வேண்டும்.

இணையாக நிறுத்தப்பட்டுள்ள இரண்டு உயரக் கம்பங்களில் உள்ள ஆணியில் சமமாக நிறுத்தப்பட்டிருக்கும் இந்தக் குறுக்குக் குச்சி. கீழே விழுந்து விடாமல், மேலே -தாண்டிச் செல்லும் உடலாளரே, அந்தக் குறிப்பிட்ட உயரத்தைக் கடந்தார் என்று அறிவிக்கப்படுவார்.