பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
103

 தில் பயணம் செய்யும் சமயத்தில், அதிக தூரம் செல்வது. போன்ற நேர்க்கோண அமைப்புடன் செல்வதைத் தான் எறி பொருளின் பயணம் என்று கலைநுணுக்கமாக கூறப்படுகிறது. இது எறிபவரின் அனுபவம் நிறைந்த ஆற்றல் மிக்கத். திறன் நுணுக்கத்திறன் தேர்ந்த செயலாகும்.

20 தவறான எறி (Foul Throw)

உடலாளர் ஒருவர் எறிகின்ற நிகழ்ச்சி நேரத்தில். எறிகின்ற பரப்பில் வசதிகளை மீறி விட்டாலும், அல்லது எறியப்படும் பொருள் எல்லைக்கு அப்பால் விழுந்து விட்டாலும், அல்லது விதிமுறைக்குட்பட்டதாக அமையாமல் இருந்தாலும் அது தவறான எறி என்று. அதிகாரிகளால் அறிவிக்கப்படும். அதனால் அவரது எறி வாய்ப்புக்களில் ஒன்று வீணாகிவிடும்.

21. விளையாட்டுப் பொதுக்குழு (Games Committee) .

விளையாட்டினை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பினை இக்குழு ஏற்கிறது. தலைமைக் குழுவான இது தமது அங்கத்தினர்களை. பல குழுக்களாகப் பிரித்து, வேலையில் விரைவும் தெளிவும் ஏற்படும் வகையில் செயல்படத் தூண்டுகிறது. இந்தப் பொதுக்குழுவே ஒரு விளையாட்டுப் போட்டியின் வெற்றிக்கு அடிப்படைத் தலைமை நிலையமாக பணியாற்றுகிறது.

22. சங்கிலிக் குண்டு எறிதல் (Hammer)

சங்கிலி குண்டுக்கான எடை ஆண்களுக்கானது. 7 250 கிலோகிராம். இதன் நீளம் 1175மி.மீட்டரிலிருந்து 1215மி.மீட்டர் வரை உள்ளது. நீண்ட உறுதியான இரும்புக் கம்பியும் அதன் முடிவில் உள்ள கைப்பிடியும் எல்லாம் சேர்ந்து 16 பவுண்டு எடையுடன் கூடிய இரும்புக் குண்டாகும்.