பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
104



23. முதல் கட்டப் போட்டி முறை (Heat)

ஓட்டப் போட்டிகளில் இறுதி நிலைக்குத் தேர்ந்கெடுக்கப்படும் தகுதி பெறுவதற்கு முன்னர் முதல் கட்டப் போட்டிகளில் (Heats) கலந்து கொண்டு, அவற்றில் முதன்மையான இடத்தைப் பெறுவது தான் தேர்ந்தெடுக்கும் ஓட்டவரிசை முறை என்று கூறப்படுகிறது.

ஓட்டப் பந்தயங்களில் அதிகமான எண்ணிக்கையில் 'வீரர்கள் கலந்த கொள்கிற பொழுது அவர்கள் எல்லோரையும் ஒரே சமயத்தில் ஓடவிட முடியாது அவர்களில் 6 பேர் அல்லது 8 பேர்களை இறுதி ஓட்டத்திற்குத் தேர்த்தெடுக்கும் முறைக்குத் தான் முதல் கட்டப் போட்டி என்று பெயர்

உதாரணத்திற்கு ஒரு போட்டிக்கு 18 பேர்கள் வந்திருக்கின்றார்கள். அவர்களை மூன்று 6 பேராக முதலில் பிரித்து, ஓடச் செய்வதுதான் முதல் கட்டப் போட்டி. ஒவ்வொரு அறுவரிலும் முதலாவதாக வரும் முதல் இரண்டு பேர்களைத் தேர்ந்தெடுக்க, மூன்று போட்டிகளிலும் மொத்தம் 8 பேர்களை இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுப்பதுதான் முதல் கட்டப் போட்டி முறையாகும்.

24. உயரத் தாண்டல் (High Jump)

ஏழு அல்லது எட்டடி வரை உயரமான இரு கம்பங்கள். அவற்றிலே அங்குலம் அல்லது செ.மீ அளவுகளில் துவாரங்கள் அவற்றிலே குறுக்குக் குச்சியைத் தாங்கும் ஆணிகள் அல்லது ஏந்திகள் உண்டு , அனைவரிலும் ஒரு குறிப்பிட்ட உயரத்தை தாண்டிக் கடக்கும் உடலாளர் ஒருவர் தான் வென்றவராவார். தாண்டி குதிக்கும் மணற்பரப்பின் நீளம் 5 மீட்டர். ( 16'4" 4 மீட்டர் அகலம் ( 13'.1/2") தாண்டிக் குதிக்க ஓடி வரும் பகுதி குறைந்தது 50 அடியி-