பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
100

அவர் தாண்டிக் குதித்த அதிக தூரமாகும். இது, பத்துப் போட்டி நிகழ்ச்சியா டெகாதலனில் ஒன்றாகும்.

35.நெட்டோட்டங்கள் [Long distance Races]

நீண்ட தூர ஓட்டங்கள் எனப்படும் நெட்டோட்டங்கள் 3000 மீட்டர், 5000 மீட்டர், 10,000 மீட்டர் 26 மைல் 385 கெஜ தூரம் உள்ள மாரதான் ஓட்டம் மற்றும் காடு மலை கடந்து (cross country) ஓடும் ஒட்டம் எல்லாம் இவ்வகையைச் சார்ந்தனவே.

36.விளையாட்டுப் போட்டி மேலாளர் (Manager)

விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யும் முக்கிய பொறுப்பாளர் ஆவார். நிகழ்ச்சிகள் உரிய காலத்தில் நடைபெறவும், ஆட்ட அதிகாரிகளைக் கண்காணிக்கவும் சில அதிகாரிகள் வரத் தவறுகிற சமயத்தில், மாற்று அதிகாரிகளை அனுப்பி. நிகழ்ச்சி தாமதமின்றி நடைபெறவும்; ஆணையாளருடன் தொடர்பு கொண்டு, மைதான த்தில் வேற்றாட்கள் கூடாமல் காக்கவும், போட்டிகள் முடியும் வரை பொறுப்பேற்று நடத்தும் கடமை மிகுந்தவர் தான் மேலாளர் ஆவார்.

37. அளக்கும் குறியீடு (Mark)

வேல், தட்டு, இரும்புக் குண்டு, சங்கிலிக் குண்டு இவைகளை எறிந்து விட்ட பிறகு, அவை விழுந்த இடத்தை அளவை நாடா துணையுடன் அளந்து குறிக்கும் செயல்தான் அளக்கும் குறியீடாகும். எறியும் நிகழ்ச்சிகளைத் தவிர, நீளத்தாண்டல், மும்முறைத் தாண்டல் நிகழ்ச்சிகளிலும் இவ்வாறு அளக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது. எறியும் வட்டத்திற்கும், எறிபொருள் விழுந்த இடத்திற்கும் தாண்டும் பலகைக்கும் தாண்டி விழுந்த இடத்திற்கும் மிக அருகாமையி