பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111

லுள்ள தூரம் தான், சாதனை தூரமாக குறித்துக் கொள்ளப்படுகிறது.

38. மைதானத் தலைவர் (Marshal)

போட்டி நிகழ்ச்சிகளை நடத்துகின்ற அதிகாரிகளையும், போட்டிகளில் பங்கேற்கின்ற உடலாளர்களையுந் தவிர, வேறு யாரையும் அதாவது வேற்றாட்களையும் காரணமின்றி, மைதானத்திற்குள்ளே அனுமதிக்காமல், மைதானத்தைக் காத்து, போட்டிகள் எந்த வித இடையூறுமின்றி நடைபெற உதவும் பணியை இவர் செய்கிறார். தமக்கு இரண்டு மூன்று உதவியாளர்களை அமைத்துக் கொண்டு, தன்பணியை திறம் படச் செய்து, தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற பொறுப்பாளராகவும் மைதானத் தலைவர் விளங்குகிறார்.

39. புதிய பென்டாதலான் (Modern Pentathlon)

ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 1912ம் ஆண்டு இணைக்கப்பட்ட 5 நிகழ்ச்சிகள் அடங்கிய போட்டியாகும்.

1. 5000 மீட்டர் காடுமலை ஒட்டம். (குதிரை சவாரி)

2. 4000மீட்டர் காடுமலை ஒட்டம். (ஒட்டம்).

3. 3000மீட்டர் நீச்சல்

4. கத்திச் சண்டை.

5. 25 மீட்டர் தூரத்தில் உள்ள பொருளைச் சுடும் துப்பாக்கிச் சுடும் போட்டி.

இந்த நிகழ்ச்சிகளில், குறைந்த எண்ணிக்கையில் வெற்றி எண்கள் பெறுகிறவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள்.