பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114


ஒவ்வொரு உயரத்தையும் தாண்ட, ஒருவருக்கு 3 வாய்ப்புக்கள் உண்டு. கோலைப் பிடித்திருக்கும் மேல் கையுடன் கீழே உள்ள மற்றொரு கையை கொண்டு போய் சேர்க்கலாம். அப்படித் தாண்டாமல், மேலே உள்ள கையை உயர்த்தி, அதற்கும் மேலே கீழ்க் கையை கொண்டு போய் தாண்ட முயலுகின்ற முயற்சி தவறு என்று குறிக்கப்படும். அந்த முயற்சியும் வாய்ப்பை இழக்கக் கூடிய தவறான, முயற்சியாகும்.


43. கோல் ஊன்றும் பெட்டி (Pole vault Box)

கோலூன்றும் பெட்டி, மரத்தால் அல்லது ஏதாவது ஒரு உலோகத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதன் உள்ளளவு தரையின் சம அளவு நிலைக்கு 1 மீ (3'.3") உள்ளதாகவும், முன் அளவின் அகலம் 1'.1" (600 மி.மீ) உள்ளதாகவும் பின் அளவின் அகலம் 6" (500 மி.மீ) உள்ளதாகவும் அமைந்திருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

தரையளவாகப் பதிக்கப்படும் பெட்டியின் தரை அளவுக்கும், பெட்டியின் கடைப்பாகத்திற்கும் இடைப்பட்ட சாய்வு 105 டிகிரியில் அமைந்திருப்பது போல் இருக்க வேண்டும். பெட்டியினுடைய பக்கங்களின் சாய்வளவு 120 டிகிரி உள்ளதா என்பதையும் பார்த்துப் பெட்டியைப் பதிக்க வேண்டும்.


44. வெற்றி எண் (Point)

போட்டி நிகழ்ச்சி ஒன்றில், முதலாவதாக வந்தவருக்கு வெற்றி எண் 5. இரண்டாமவருக்கு வெற்றி எண் 3. மூன்றா வதாக வந்தவருக்கு வெற்றி எண் 2. நான்காமவருக்கு 1.

தொடரோட்டப் போட்டிகளில் பங்கு பெறுகின்ற குழுக்கள் இரண்டே இரண்டு தான் என்றால், முதலாவதாக