பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115

வென்ற குழுவிற்கு வெற்றி எண் 5, இரண்டாம் குழுவிற்கு வெற்றி எண் 2.

மூன்று குழுக்கள் பங்கு பெற்றால், 7, 4, 2 என்ற முறையில் வென்ற குழுக்களுக்கு வெற்றி எண் வழங்கப்படும். ஆறு குழுக்கள் பங்கு பெற்றால், 7, 5, 4, 3, 2, 1 என்ற முறையில் வெற்றி எண்கள் வழங்கப்படும்.

45. எதிர்ப்பு மனு (Protest)

போட்டியில் பங்கு பெறும் ஒரு உடலாளரின் தகுதி குறித்து எதிர்ப்பு தெரிவிப்பவர், அந்தக் குறிப்பிட்டப் போட்டி, தொடங்குவதற்கு முன்னதாகவே நீதிக் குழுவிடம் அறிவித்து விட வேண்டும். அதற்குரிய நீதிபதியாக யாரும் அதுவரை நியமிக்கப்படவில்லை யென்றால், நடுவரிடம் கூற வேண்டும்.

அந்தப் பிரச்சினையும் போட்டிக்கு முன்னே திருப்திகரமாகத் தீர்க்கப்படவில்லையென்றால், 'முடிவாகாத பிரச்சினை' என்ற முறையில் கூறி, சம்பந்தப்பட்டவர்களைப் பங்கேற்கச் செய்து, அந்தத் தகவலை, தலைவர், செயலருக்குத் தெரிவித்து விடவேண்டும். மாவட்ட மாநிலப் போட்டி என்றால், அச்சேதியைத் தலைமைக் கழகத்திற்கு உடனே தெரிவித்திட வேண்டும்.

நிகழ்ச்சிகளில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது குழப்பங்கள் ஏற்பட்டால், அதன் காரணமாக எழுப்பும் எதிர்ப்புக்களை உடனடியாகவோ அல்லது போட்டி முடிவினை அதிகாரிகள் அறிவித்த 30 நிமிடத்திற்குள்ளாகவோ அல்லது அந்த நிகழ்ச்சி முடிவுற்ற 15 நிமிடங்களுக் குள்ளாகவோ தெரிவித்துவிட வேண்டும். எந்த எதிர்ப்பையும் எழுத்தின் (மனு) மூலமாக சம்பந்தபட்டவர்களுக்கு குறிப் பிட்டிருக்கும் பணத்தைக் கட்டி, மனுவை சமர்ப்பிக்க