பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. வளைகோல் பத்தாட்டம்
(HOCKEY)

1. பந்து (Ball)

பந்தின் உள்பாகம் தக்கையாலும், முறுக்கேறிய கெட்டி நூலாலும் செய்யப்பட்டிருக்கும். இந்தப் பந்தின் நிறம் வெண்மை. பந்தின் கனம் 53/4 அவுன்சுக்கு மிகாமலும் 51/2 அவுன்சுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும். பந்தின் சுற்றளவு 91/4 அங்குலத்திற்கு மிகாமலும், 813/16 அங்குலத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

2. தவறான தடுத்தாடல் (Blocking)

ஒரு ஆட்டக்காரர் பந்தைத் தன் கோலினால் தள்ளி ஆடிக் கொண்டிருக்கும் பொழுது, தவறான முறையில் சென்று தடுத்தாடி அவர் ஆட்டத்தையும் முயற்சியையும் தடை செய்வது தவறான ஆட்டமாகும். இந்தத் தவறுக்குத் தனி அடி அடித்தாடும் வாய்ப்பு எதிர்க் குழுவிற்குக் கிடைக்கிறது.

3. புல்லி (ஆட்டத் தொடக்கம்) (Bully)

ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவர் வந்து இதில் பங்கு பெறுவர். வலப்புறத்தில் அவரது கடைக் கோடு இருக்க,