பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

வருகிற பொழுது நடுவர் எதிர்க் குழுவிற்கு ஒறு நிலை அடி அடிக்கும் வாய்ப்பினை வழங்குகின்றார். இதில் தடுக்கும் குழுவின் இலக்குக் காவலனும். தாக்கும் குழு ஆட்டக்காரர் ஒருவரும் பங்கு பெறுகின்றனர். இலக்கின் முன்புறம் 7 கெஜத் துரத்தில் உள்ள புள்ளியில் பந்து வைக்கப்படுகிறது தடுக்கும் குழு ஆட்ட க்காரர் அதைத் தள்ளியோ அடித்தோ இலக்கினுள் செலுத்த முயற்சிப்பதை இலக்குக் காவலன் தடுத்திடும் முயற்சியில் இருக்கிறார். மற்ற எல்லா ஆட்டக்காரர்களும் 25 கெஜக் கோட்டி ற்கு அப்பால் நின்று கொண்டிருக்க வேண்டும். பந்து அடிக்கப்படும் வரை, இலக்குக் காவலன் தனது கால்களை அசைக் காமல் நிற்க வேண்டும். அடிப்பவரும் அடிப்பது போல் பாவனை செய்யாமல், நடுவர் விசில் ஒலிக்குப் பிறகு உடனே அடிக்க வேண்டும் வெற்றி எண் பெற்றால் நடுக்கோட்டிலிருந்து ஆட்டம் தொடரும். இல்லையென்றால் 16 கெஜத் தூரத்தில் பந்தை  வைத்து தடுக்கும் குழுவினர் பந்தை அடித்தாடி, ஆட்டத்தை தொடருவார்.

27. முரட்டாட்டம் (Rough Play)

அநாவசியமான முறையில், அநாகரிகமான வழியில், விதிமுறைகளுக்கு மீறி, எதிராளியிடம் நடந்து கொள்ளும் முறையே முரட்டாட்டம் ஆகும். முதலில் தவறு என்று குற்றம் சாட்டி, அடுத்து செய்தால், அதற்கு 'எச்சரிக்கை'க் கொடுத்து பின்னும் மீறி நடந்து கொண்டால், ஆட்டத்தை விட்டே வெளியேற்றப்படும் சூழ் நிலைக்கு ஆளாகி விடுகிறார். முரட்டாட்டம் என்பது பண்பாடற்ற செயல்களாகிடும்.

28. வெற்றி எண் குறிப்பாளர் (Scorer)

ஆட்டத்தில் பெறுகிற வெற்றி எண்களைக் குறித்து வைக்கின்ற பொறுப்புடன் இருப்பவராவார். இரண்டு குறிப்பாளர்கள் இந்த ஆட்டத்தில் இடம் பெறுகின்றனர்.