பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137


34. அவசர கால ஓய்வு நேரம் (Time out) ஏதாவது இடர்ப்பாடு அல்லது காயம் நேரிட்டால், அல்லது அபாயம் ஏற்பட்டால், அதற்கான அவசர கால ஒய்வு நேரம் என்பதாக 5 நிமிடம் உண்டு. காலநிலை மாறுபாடு ஏற்பட்டால், அதனைப் பற்றி விவாதிக்க இந்த 5 நிமிடங்களைக் கொள்ளலாம். காற்று வேகமாக வீசுகிறது, என்பதற்காக இந்த ஒய்வு நேரத்தைப் பயன் படுத்திக் கொள்ளக் கூடாது.

35. ஆட்டச் சீருடை (Uniform)

கால் சட்டை, அரைக்கை சட்டை அல்லது கைபனியன், கால்களுக்கு சாக்ஸ், இலேசான காலணி இவைகள் ஆட்டச் சீருடையாகப் பின்பற்றப்படுகின்றன.

வி. க. அ 9