பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
44

42. சொந்த இலக்கு (Own Basket)

ஒரு குழுவானது தான் பந்தை எறிந்து வெற்றி எண் பெறுகிற வாய்ப்பளிக்கும் உரிமை பெற்ற ஒரு வளையத்தை 'சொந்த இலக்கு' என்பதாக ஏற்றுக்கொள்கிறது.

43. வழங்குதல் (Pass)

கூடைப் பந்தாட்டத்தில் பந்தை எறிந்து வழங்குவது ஒரு முக்கியமான திறன் நுணுக்கமாகும். ஒரு குழுவைச் சேர்ந்தவர்களிடையே பந்தை மாறி மாறி வழங்கிக் கொண்டு, விதிகளை மீறாமல், எறியும் வளையத்தை நோக்கி முன்னேறிச் செல்வது தான் வழங்குதல் ஆகும்.

44. சுற்றுப் பார்வை(Peripheral Vision)

ஒருவர் தனக்கு முன் புறத்தில் உள்ளவர்களை அல்லது பொருள்களைத் தவிர, சுற்று முற்றும் உள்ள நிலையை ஒரு நொடியில் பார்த்து அறிந்து கொள்ளும் பார்வைக்கு 'சுற்றுப் பார்வை' என்று பெயர். அதாவது, பந்தைத் தன்வசம் வைத்திருக்கும் ஒரு ஆட்டக்காரர், எதிராட்டக்காரர்களின் இயக்கங்கள் எவ்வாறு உள்ளன. தனது குழு ஆட்டக்காரர்கள் யார் யார் எங்கெங்கே இருக்கின்றார்கள் என்பதை நேரடியாகப் பார்த்து அறிந்து கொள்ளாமல், ஓரவிழியால், பக்கவாட்டில் பார்ப்பது என்பார்களே அது போல, பார்வையை சுழற்றி மறைமுகமாகக் கண்ணோட்டம் விட்டு அறிந்து கொண்டு ஆடும் திறமைக்குத் தான் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டிருக் கிறது.

45.தனியார் தவறு (Personal Foul)

ஒரு ஆட்டக்காரர், பந்து ஆட்டத்தில் இருக்கும்பொழுது எதிராட்டக்காரர் மேல் தொடுவது அல்லது படுவது போன்ற