பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழுத வேண்டிய நூல்கள் இன்னும் எத்தனையோ நூறுகள் இருக்கின்றன என்று அறியும் போது, மலைப்பும், திகைப்பும், வியப்பும், பொறுப்பும் என்னைத் திக்கு முக்காடச் செய்கின்றன.  விளையாட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேவைக்காகத் தான் தோன்றின என்று அறிந்த போது, விளையாட்டுக்களின் கதைகள் எனும் நூலை எழுதினேன்.

விளையாட்டு என்பது காட்டாறு போன்றதல்ல; ஒரு கட்டுக்குள் அடங்கி, கணக்கற்ற நன்மைகளைச் செய்யும் ஜீவநதி என்று உணர்ந்த போது, விளையாட்டு க்களின் விதிகள் என்ற நூலை உருவாக்கி மகிழ்ந்தேன்.

விளையாட்டுக்களிலுள்ள ஒவ்வொரு சொல்லும் ஒரு பெரும் உண்மையை உள்ளடக்கிக் கொண்ட பொருளான சொல்லாக இருக்கின்றன என்பதை உணர்ந்த பொழுது, விளையாட்டுக்களில் சொல்லும் பொருளும் என்ற நூலை இயற்றினேன்.

விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி என்று, 5000க்கும் மேற்பட்ட சொற்களை விளையாட்டு வாரியாக, அகர வரிசையில் தொகுத்து, புது தமிழ்ச் சொற் களை உருவாக்கினேன்.

இனி இப்படி ஒரு கடின வேலை இருக்காது என்று எண்ணிய போது, விளையாட்டுக்களில் உள்ள கலைச் சொற்கள் வந்து என்னை வேலை வாங்கத் தொடங்கின.

விளையாட்டுக் கலைச் சொற்கள் எல்லாம், விளையாடு வோருக்கும், விளையாட்டுத் துறையில் ஈடுபட்டவர்களுக்கும் மட்டுமே புரியும் நிலையில் உள்ளன. அவற்றைப் பொது மக்களும், விளையாட்டு விரும்பிகளும் புரிந்து கொள்ளும்