பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

நிலையில் விளக்கப்பட வேண்டும், என்ற முனைப்பு, நியாயமானது தானே !

அந்த நியாய உணர்வின் நிதர்சனமான வெளிப்பாடாகத் தான், விளையாட்டுத் துறையில் கலைச் சொல் அகராதி என்ற நூலை எழுதியுள்ளேன்.

ஒவ்வொரு சொல்லும் எளிதில் புரியும் படி, ஒரு சில வரிகளில் விளக்கியுள்ளேன் படிப்பவர்களுக்கு நிறைய பயன் கிடைக்கும் என்றும் நம்புகிறேன்.

இந்த அரிய நூலை, தமிழறிந்த அன்பர்கள் ஆதரித்து மகிழ வேண்டும் என்றும் விரும்புகிறேன்.

அழகுற அச்சிட்டுத் தந்த கிரேஸ் பிரிண்டர்சுக்கும், ஆக்கபூர்வமான பணிகளை ஆற்றிய திரு. R. ஆதாம் சாக்ரட்டீசுக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

இது முதல்பாகம் தான். இரண்டாம் பாகம் விரைவில் வெளி வர இருக்கிறது.

ஞானமலர் இல்லம் அன்பன்

சென்னை - 17. எஸ். நவராஜ் செல்லையா