பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
81

பாதத்தைத் தொட்டவாறு பந்து விக்கெட்டைக் கடந்து சென்றாலும், அதற்காகப் பெறுகின்ற ஓட்டத்தை எல்லாம் மெய்படு ஒட்டம் (Leg Bye) என்றே அழைக்கின்றனர்,

காலில் பட்டாலும் மேலில் பட்டாலும் எல்லாம் ஒன்று தான். ஆனால் ஆங்கிலத்தில் Leg என்று தான் குறிப்பிட்டிருக்கின்றனர். தமிழில், அதற்கு மெய்மீது படுகின்ற என்பதைக் குறித்துக் காட்ட, மெய்படு ஓட்டம் என்று. தந்திருக்கின்றோம்,

20.ஓட்டம் தராத பந்தெறி (Maiden Over)

ஒரு பந்தெறி தவணைக்கு (over) ஆறு எறிகள். சில பகுதிகளில் 8 எறிகள் உண்டு. அவ்வாறு ஆறு முறை பந்து வீசியெறிவதன் மூலம் எதிர்த்து ஆடுகின்ற பந்தடி ஆட்டக்காரர், ஒரு ஓட்டம் கூட எடுக்க முடியாமல் திறமையுடன் எறிந்து விட்டால், அதற்குக் தான் ஓட்டம் தராத பந்தெறி என்று பெயர். Maiden என்றால் கன்னியென்பது பொருள் குழந்தை பெற்றவள் தாய் என்றும், தாய்மை அடையாதவளை கன்னியொன்றும் அழைப்பது மரபு. ஓட்டம் என்ற குழந்தையைத் தராமல், சாமர்த்தியமாகப் பந்து வீசும் ஆற்றலைக் குறிக்கவே Maiden over என்று ஆங்கிலேயர் பெயரிட்டிருக்கின்றனர்.

21. முறையிலா பந்தெறி (No Ball)

விதிகளுக்குப் புறம்பாக எறிந்தால் அதை முறையிலா பந்தெறி என்று நடுவர் அறிவித்து விடுவார். (முறையுடன் எறிவதை 6. Bowling என்ற பகுதியில் காண்க).

வேறுபல சூழ்நிலைகளிலும் நடுவர் இவ்வாறு அறிவிப்பார்.