பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

நிர்ணயிக்கப்படவில்லை. பாராட்டு உண்டு. வெகுமதிகள் உண்டு. இரு நாடுகளின் ஏகோபித்த முடிவில் நடத்தப் பெறும் போட்டிகள். இந்த சொல் கிரிக்கெட் ஆட்டத்திற்கே உரிய தனி உரிமை பெற்ற சொல்லாகும்.

- உதாரணத்திற்கு : இங்கிலாந்தில் இருந்து இங்கிலாந்து அணிக 1862, 1864, 1873 ஆகிய ஆண்டுகளில், ஆஸ்திரேலியா நாட்டிற்கு விஜயம் செய்து விளையாடின. இந்தப் ோட்டிகள் எல்லாம் சாதாரணப் போட்டிகளாகவே குறிப்பிடப்பட்டன.

ஆனால், 1877ம் ஆண்டு ஒரு போட்டி நடைபெற்றது. இங்கிலாந்திலிருந்து தேர்தெடுக்கப்பட்ட அணியில் 11 பேர். ஆஸ்திரேலியாவிலிருந்து 11 பேர். இந்தப் போட்டி ஆட்டம் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் 1877 மார்ச்சு மாதம் 15-17 ந்தேதி நடைபெற்றது.

ஒரு குறிப்பிட்ட ஆட்டக்காரர்களுடன். குறிப்பிட்ட விதிமுறைகளுடன், 3 நாட்கள் தொடர்ந்தாற் போல் ஆடிய இந்தப் போட்டியை  முதல் பெரும் போட்டி என்று ஆட்டக் குறிப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது.


41. ஆட்டச் சமநிலை  (TIE) 

முழு ஆட்டமும் முடிவடைந்த நிலையில், இரண்டு குழுக்களும் எடுத்திருக்கும் ஓட்டங்கள் சம எண்ணிக்கையில் இருந்தால் இருவருக்கும் வெறறி தோல்வியற்ற சமநிலை என்று அறிவிக்கப்படும்.

42. நாணயம் சுண்டுதல் (TOSS)

இரு குடித்தலைவர்களும், இந்த நாணயம் சுண்டி விடும் வாய்ப்பில் பங்கு பெறுவார்கள். ஆட்டம் தொடங்குவதத்