பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
98



3. உடலாளர் (Athlete)

உடலைக் கட்டுப்படுத்தி, பயிற்சிகளால் பக்குவப்படுத்தி, போட்டித் திறன்களில் தேர்ச்சியும் எழுச்சியும் பெறுகிற ஒருவர் உடலாளர் என்று அழைக்கப்படுகின்றார்.

பழங்கால கிரேக்க நாட்டிலும்,ரோமானியர்கள் ஆட்சியிலும், நாட்டில் நடைபெறுகிற பொது விளையாட்டுக்களில் பரிசு பெறும் நோக்கத்துடன் பங்கு பெறுகிற ஒருவர். உடலாளர் என்று அழைக்கப்பட்டார்.பின்னர்,உடற்பயிற்சி செய்து அதன் தொடர்பான போட்டிகளில் பங்கு பெறுவதற்காக தங்களது தேகத் திறன்,சக்தி, ஆற்றல்,நெஞ்சுரம், மற்றும் அதற்குரிய திறன் நுணுக்கங்களில் வளர்த்துக்கொண்ட தேர்ச்சியுடன் போட்டியிடும் ஆண் பெண் அனைவரும் உடலாளர் என்றே அழைக்கப்பட்டனர்.

4. தனித்திறன் போட்டி நிகழ்ச்சிகள் (Athletic events)

மனிதர்க்கு இயற்கையாக வரும் ஆற்றல் மிக்க இயக்கங்களான ஓடுவது, தாண்டுவது. எறிவது ஆகிய முப்பிரிவுத்திறன் களைப் வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளே இவ்வாறு அழைக்கப்படுகின்றன. 50 மீட்டரிலிருந்து 26 மைல் 380 கெஜ தூரம் வரை பலதரப்பட்ட ஓட்டப் போட்டிகள் உள்ளன. இரும்புக் குண்டு,வேல்,தட்டு, சங்கிலிக் குண்டு என நான்கு வகை எறிதல், நீளத் தாண்டல், உயரத் தாண்டல், முறைத் தாண்டல், கோலூன்றித் தாண்டல் என நான்கு வகை தாண்டல்கள், இத்துடன் தொடரோட்டப் போட்டிகளும் இப்போட்டி நிகழ்ச்சிகளில் அடங்கும்.

5. விரிவடைந்த இதயம் (Athletic Heart)

அடிக்கடி உடல் திறன் நிகழ்ச்சிகளிலும், போட்டிகளிலும் பங்கு பெறுகிற உடலாளர் ஒருவரின் இதயம், பலவீண-