பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


உடலால் சிறந்து, உடல் ஆற்றலை ஒருமுகப்படுத்தி திறன்களில் மிகுந்து, உச்சகட்டமாகக் செயலாற்றுபவரையே உடலாளர் என்கிறோம்.

பொருள் பொதிந்த இந்தச் சொல்லுக்கு ஏற்ப விளையாட்டில் பங்கு பெறுபவர்கள் அனைவரும் விளங்க வேண்டும் என்பதே நம் விருப்பமாகும்.

2. COACH

ஒரு குறிப்பிட்ட விளையாட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சியளிப்பவரை நாம் 'கோச்' என்று அழைக்கிறோம்.

ஆரம்ப காலத்தில் கோச் (Koch) என்றால் நான்கு சக்கர வண்டி என்பதற்குரிய பெயராகும். அந்த நான்கு சக்கர வண்டியான 'கோச்' என்ற சொல்லிலிருந்து தான், இந்தப் பெயரும் பிறந்து வந்திருக்கிறது.

கோச் என்ற வண்டியை முதன் முதலில் செய்தவன் ஹங்கேரி நாட்டில் உள்ள கோஷி அல்லது கோசி (KOSZI) or (KOCSI) என்ற நகரில் வாழ்ந்து வந்தானாம். அவன் வாழ்ந்து வந்த நகரத்தின் பெயரே அவன் செய்த வண்டிக்குப் பெயராக வந்துவிட்டது. அது ஆட்களை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஏற்றிச் செல்லப் பயன்பட்டதாகும்.

இது எப்படி விளையாட்டுக்குப் பொருந்தி வந்தது என்றால், கோச் என்னும் பயிற்சியாளன், தான் பயிற்சி தரும் ஆர்வமுள்ள வீரர்களைத் தன் கூடவே