பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்

10


கூட்டிக் கொண்டு சென்று பயிற்சி அளித்ததால்தான் அந்தப் பெயரைத் தந்திருக்கின்றார்கள்.

ஒரு வேளை, குரு குல வாசத்தில் இருந்த குரு சீடன் முறை போல, பயிற்சியளிப்பவர் பெறுபவர்களைப் பயிற்சி தர அழைத்துச் செல்லும் தன்மையில் அமைந்திருக்கலாம் என்பதால்தான், கோச் என்று அழைக்கப்பட்டிருக்கிறார் போலும்.

இன்று கோச் என்பவர், சிறப்புப் பயிற்சி தரும் பொறுப்பில் உள்ளவர், பொறுப்பானவர் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

3. DRILL MASTER

உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் விளையாட்டுத்துறை ஆசிரியராகவும் இயக்குநராகவும் பணியாற்றுகின்ற உடற்கல்வி ஆசிரியர்களை, ஆரம்ப காலத்தில் டிரில் மாஸ்டர் என்று பொதுமக்களும், மற்றும் ஆசிரிய மாணவ சமுதாயமும் பெயரிட்டு அழைத்ததுண்டு.

விளையாட்டுத் துறையில் சற்று மாற்றம் ஏற்படத் தொடங்கியது. அதாவது விழிப்புணர்ச்சிப் பெறத் தொடங்கிய பொழுது, டிரில் மாஸ்டர் என்ற பெயர் மாறி மறைந்து, பி.டி. மாஸ்டர் (PT Master) என்று வரத் தொடங்கியது. அதாவது உடலுக்குப் பயிற்சி தருகின்ற ஆசிரியர் என்று ஆசிரியரின் உயர்வான உண்மை நிலையை உணரத் தொடங்கி அழைக்கத் தலைப்பட்டனர் மக்கள்.