பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


எல்லாம் உண்மையை நிரூபிக்கின்ற செயல்கள் தானோ என்று நாம் ஐயப்படவும் வேண்டியுள்ளது.

Fan என்ற சொல்லுக்குரிய பொருளானது, ஒரு குறிப்பிட்ட விளையாட்டில் அல்லது ஆர்வம் தருகின்ற செயலில், அதிக ஈடுபாடு அல்லது வேகம் நிறைந்த வெறி அல்லது பைத்தியக்காரத்தனமான உணர்வு அல்லது கட்டுக்கடங்காத கட்டு மீறிய உணர்வு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அப்படி அமைகின்ற Fan என்பவன், அதிகமான ஆவல் மிகுந்தவனாக, ஒருமுகப்படுத்தப்பட்ட ஈடுபாடு நிறைந்தவனாகவே என்றும் விளங்குகிறான். இனி, Fan என்ற சொல் எவ்வாறு வந்தது என்பதைக் காண்போம்.

ரோமானியர்கள் ஆட்சிக் காலத்தில், ரோம் நாட்டில் சில மத குருக்கள், தங்களுடைய மத நிகழ்ச்சிகளில் மிகுந்த ஈடுபாடும் வெறியும் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் விழா நடக்கும் போது, பக்தி வெறியிலும், எழும் வீராவேசத்திலும் தாங்கள் அணிந்திருக்கும் நீண்ட அங்கியைக் கழற்றிக் கிழித்தெறிந்துவிட்டு, தங்களுடைய உடம்பை வெட்டிக் கொள்வார்கள். அப்பொழுது அவர்களுடைய இரத்தமானது எல்லா பகுதிகளிலும் தெறித்துத் தெளித்திருக்கும்.

அந்த மதகுருக்கள், தாங்கள் வணங்குகின்ற புனித ஆலயத்தில் வாசம் செய்கின்ற தேவதைகளை மகிழ்விக்கின்ற செயல் என்று நம்பியே இவ்வாறு இரத்தப் பலியிட்டுத் தங்கள் பக்தியை பறைசாற்றிக்