பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தங்கள் சாரட்டிலோ அல்லது தங்கள் ஓட்டும் வாகனத்திலோ அல்லது தங்கள் கூடவோ கொண்டுபோகின்ற புதிய நாய்களை, விரட்டிக் கொண்டிருக்கும் நாய்களின் வேகம் தளர்ந்து போகின்ற தருணத்தில் மாற்றி, வேட்டையாடுவதை மும்முரப்படுத்துவார்கள்.

விரட்டும் புதிய நாய்களும் அந்த மிருகத்தின் வாசனையை மோப்ப சக்தியினால் பெற்றுக் கொண்டு விரட்டத் தொடங்கிவிடும். அதனை Relay என்றனர்.

ஓட்டப் பந்தயத்திலும் ஒருவர் ஓடிப் போய் முன்னே நிற்கின்றவரிடம் குறுந்தடியை (Baton) தந்துவிட்டு நின்று கொள்ள, அவர் அங்கிருந்து ஒட்டத்தைத் தொடர, அங்கே ஓட்டம் தொடர்கிறது. இவ்வாறு ஆள் மாற்றி ஆள் தொடர்ந்து ஓடிச் செய்கின்ற ஒரே காரியத்தையும் Relay என்றுதான் அழைக்கின்றனர்.

நாம் தமிழில் , தொடர்ந்து ஒடுவதால், தொடரோட்டம் என்ற அழைக்கிறோம். வாயில்லா ஜீவன்கள் ஓடி வழி காட்டிய ஓட்டத்திற்கான சொல், விளையாட்டில் இறவாவரம் பெற்ற நிகழ்ச்சியாக அல்லவா மாறிவிட்டிருக்கிறது!



9. UMPIRE


நடுவர் என்று நாம் அழைக்கின்ற சொல்லானது ஆங்கிலத்தில் Umpire என்று கூறப்படுகின்றது. இந்த அம்பயர் என்ற ஆங்கிலச் சொல்லானது, இலத்தின் சொல்லான Non per என்பதே மூலச் சொல்லாகும்.