பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23


Non per என்ற இந்த இலத்தின் சொல்லுக்கு உரிய பொருள் என்ன தெரியுமா? இணையில்லாத (Not Equal) என்பது அர்த்தமாகும்.

அதே சொல்லுக்கு Uneven என்றும், Third Person என்றும் அர்த்தம் கூறுகின்றார்கள்.

Uneven என்ற சொல்லுக்குத் தமிழில், சமதளமில்லாத, கரடு முரடான, மேடு பள்ளமான, இரட்டைப்படையல்லாத என்று அர்த்தங்கள் உள்ளன.

Third Person என்றால் மூன்றாம் மனிதர் என்று கொள்ளலாம். இப்பொழுது நடுவர் என்ற சொல்லைத் தருகின்ற Non per எனும் இலத்தின் சொல்லிலிருந்து வரும் Umpire எனும் வார்த்தை எத்தகைய முக்கியமான பொருள்களில் உருவாகியிருக்கிறது என்ற உண்மையையும் மகத்துவத்தையும் நாம் நன்கு உணரலாம்.

இரண்டு குழுக்கள் விளையாடும் பொழுது அதனை நடத்தித் தருகின்ற பொறுப்பேற்று, எல்லோர்க்கும் மேலாக உயர்நிலையில் நிற்கின்ற ஒருவர், இரண்டு குழுக்களுக்கும் மத்தியிலே நடுவராக மட்டும் நிற்கவில்லை, இரண்டு குழுக்களிலும் உள்ளவர்களுக்கும் மேற்பட்டவராக, இணையில்லாதவராகவே இருக்கிறார். அவருக்கு இணை என்று அவரேதான் இருக்கிறாரே தவிர, அங்கு வேறு யாருமில்லை.

மற்றும், சமதளமில்லாத, கரடு முரடான, மேடுபள்ளமான, இரட்டைப் படையல்லாத என்கின்ற அர்த்தங்களைப் பார்க்கும் பொழுது, நடுவர் தன் கடமையினை ஆற்றும் பொழுது, தாங்கள் எடுக்கின்ற