பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27


நிலையாக இருந்திருக்கிறது. Score என்ற வார்த்தையும், பழைய நார்ஸ் எனும் மொழிச் சொல்லான Skor என்ற வார்த்தையிலிருந்துதான் உருவாகி வந்திருக்கிறது.

பழங்கால நார்ஸ் சொல்லான Skor என்பதற்கு ஆங்கிலத்தில் Notch என்பது பொருளாகும் அதற்கு, கீறு, வெட்டு, அடையாளம் செய் என்பது பொருளாகும். இப்பொழுது காகிதத்தில் நாம் வெற்றி எண்களைக் குறிக்கிறோம். கீறுவதில்லை. சில சமயங்களில் காகிதத்தில் உள்ள எண்களை குறுக்கும் நெடுக்குமாக அடித்துத்தான் வெற்றி எண்களைக் குறிக்க வேண்டியிருக்கிறது.

ஆரம்ப காலத்தில், கீறு அல்லது வெட்டு என்னும் பொருளில் இந்த சொல் உருவாகி வந்திருப்பதும் காரணத்துடன்தான். அதாவது கையில் வைத்திருக்கும் ஒரு குச்சியில் அல்லது சிறு தடியில் (Stick) கீறி அடையாளம் செய்தவாறு ஆட்டத்தின் வெற்றி எண்களைக் குறிக்கும் பழக்கம் ஆரம்ப காலத்தில் இருந்தது.

ஒவ்வொரு கிரிக்கெட் ஆட்டத்தில் பந்தை அடித்து விட்டு ஒடி ஒட்டம் எடுக்கும் பொழுதும், ஒவ்வொரு முறை குச்சியில் கீறி குறித்துக் கொண்டு நினைவு படுத்தி வந்திருக்கின்றனர்.

படிக்காத பெண்கள் பால்கணக்கை சுவற்றில் கோடு கிழித்துக் கணக்கிடுவதை இன்றும் நம்மவரிடையே அதிகமாகக் காணப்படுவதையும் நாம் இங்கே நினைவு படுத்திக் கொள்ளலாம்.