பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35


இந்த அடிப்படைக் கருத்தையே ஆணிவேராகக் கொண்டே ஆங்கிலேயர்கள், டோர்னமென்ட் என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கின்றார்கள்.

மாற்று என்ற சொல்லுக்குரிய கருத்தை அடிப்படையாக வைத்து, அவர்கள் மேற்கொண்ட போட்டிமுறையே, டோர்னமென்ட் என்னும் சொல் வர பொருத்தமான காரணமாகவும் அமைந்திருக்கிறது. அதனை இனி காண்போம்.

இங்கிலாந்தில் கி.பி. 5ம் நூற்றாண்டுக்கும் 15ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை இடையிருட்காலம் (Middle ages) என்று அழைப்பார்கள். அந்தக் காலத்திலே, பணக்காரர்களும் பிரபுக்களும் அடித்தள மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த காலம். பிரபுக்களுக்குப் பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் என்ற வரிசையில் குதிரை மீதேறி போட்டியிடும் ஆட்டமும் ஒன்று இருந்தது.

தங்கள் உடல் முழுவதும் முகத்திற்கும் கூடத்தான். இரும்புக் கவசம் இட்டுக்கொண்டு குதிரைமீது அமர்ந்து கொண்டுள்ள வீரர்கள் (Knights) இரு குழுவினராகப் பிரிந்து கையில் ஆயுதங்களுடன் போட்டியிடுவார்கள். அந்தப் போட்டியிலே (Tournament) உண்மையான போர்க்களம் போலவே சண்டை நடக்கும். ஆனால், அது ஒரு காட்சி போட்டியாகவே நடத்தப்பட்டது.

பெருந்தனக்காரர்களும், பிரபுக்களும், பேரழகு மிக்க சீமாட்டிகளும் சுற்றியிருந்து வேடிக்கை