பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாசா என்பதற்கு மீன் பிடிக்கும் வலை என்பது பொருளாகும்.

இப்பொழுது நீங்களே உங்களை பாராட்டிக் கொள்ளலாம். மீன் வலையின் நினைவு ஏன் உங்களுக்கும் வந்தது என்று.

17.GYMNASIUM 

உள்ளாடும் அரங்கம் என்று நாம் தமிழில் கூறுகின்றோம். வெயில், மழை, பனி, குளிர் என்று இயற்கை தரும் இன்னல்களிலிருந்து தற்காத்துக் கொண்டு, பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் விளையாட்டுக்களையும். உடற்பயிற்சிகளையும் நடத்துகின்ற இடமாக இந்த உள்ளாடும் அரங்கம் தற்காலத்தில் உதவி வருகின்றது.

Gymnos என்ற கிரேக்கச் சொல்லுக்கு நிர்வாணம் (Naked) என்பது பொருளாகும். Gymnazo எனும் கிரேக்கச் சொல்லுக்கு நிர்வாணமாகப் பயிற்சிசெய் (Train Naked) என்பது பொருளாகும்.

பழங்கால கிரேக்க நாட்டில் உடலழகுப் பயிற்சிகளை உடலில் உடையேதுமின்றி நிர்வாணமாக இருந்து செய்வது பழக்கமாகக் கடை பிடிக்கப்பட்டு வந்தது. ஏனென்றால், உடலை அவர்கள் ஓர் அழகுப் பொருளாகக் கருதி வந்ததே காரணமாகும்.

அதுவுமின்றி, ஆண்டவனின் அற்புத படைப்பான அழகு தேகத்தை மற்றவர்களும் கண்டு களிக்க