பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47


வெற்றிகரமாக உதைத்தாடினாலும், வளைகோல் பந்தாட்டத்தில் பந்தை இலக்கினுள் அடித்து வெற்றி எண் (Goal) பெற்று விட்டாலும், Hat Trick எனும் பெயரே பயன்படுத்தப்பட்டு வருகிறது.



21. ARENA


அரினா என்று அழைக்கப்படும் ஆங்கிலச் சொல்லான Arena இலத்தின் சொல்லாகும். அதுவே, ஆங்கிலத்திலும் அப்படியே அழைக்கப்பட்டு வருகிறது.

நான்கு புறங்களிலும் சுவர்களால் அல்லது தடுப்புக்களால் சுற்றி வளைக்கப்பட்டு, ஒட்டப் பந்தயம், மல்யுத்தம், குத்துச்சண்டைப் போட்டி, மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்ற இடத்தை Arena என்று இப்பொழுதும் அழைக்கின்றார்கள்.

இந்த Arena என்ற சொல்லுக்கும், தமிழ் அகராதியில் களம், அரங்கம், வட்டரங்கம், போர்க்களம் என்றதான பொருள் கூறப்பட்டிருக்கிறது.

இந்தப் பொருளில்தான் இந்த நாட்களில் இச்சொல் ஏற்கப்பட்டு வந்தாலும், ஆரம்ப நாட்களில் அது வேறொரு பொருளையே குறிக்கும் தன்மையில் பேசப்பட்டு வந்தது.

Arena எனும் இலத்தின் சொல்லுக்கு மணல் (Sand) என்பது அர்த்தம்.

மணல் என்ற சொல்லுக்கும் , விளையாட்டு அரங்கத்திற்கும் எப்படி பொருந்தி வரும், ஏன் இந்த சொல்லால் அழைத்தார்கள் என்று நாம் திகைத்துக்