பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்

66


அதனை அமெரிக்காவில் உள்ள ஸ்பிரிங் பீல்டு கல்லூரியில் பணியாற்றிய டாக்டர் ஒருவர் பார்த்தார். இந்தப் பெயர் இதற்கு எடுப்பாகவும் இல்லை , சிறப்பாகவும் இல்லை, வேறு ஒரு பெயர் வைத்தால் நன்றாக இருக்குமே என்று கூறி, தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

அன்பான அனுமதியைப் பெற்று, அவர் ஒரு பெயரை அறிவித்தார். அதுதான் Volley ball என்ற பெயராகும். இந்தப் பெயரை எல்லோரும் ஏற்றுக் கொண்டனர். அதுவே உலகில் புகழ் பெற்றப் பெயராகவும் மாறிவிட்டது.

அவர் என்ன நோக்கத்துடன் இந்தப் பெயரை இதற்கு இட்டார் என்றால், பந்தை வலைக்கு மேலே உயர்த்திப் போட்டு அடிக்க ஆரம்பித்தால், அந்தப் பந்து கீழே விழாமல், வலைக்கு மேலே இருபுறமும் போய் வருவது போல, மாறி மாறித் தள்ளியவாறு ஆடிக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான்.

பெயர் வைத்த டாக்டர் ஹால் ஸ்டெட்டுக்கு எப்படி இந்த Volley என்ற பெயர் கிடைத்தது!

Volley என்ற சொல்லுக்கு நாம் முன்னர் விவரித்த அர்த்தத்தை படித்திருப்பீர்கள். இந்த Volley என்ற ஆங்கிலச் சொல்லானது Volare என்ற இலத்தீன் சொல்லின் வழிச் சொல்லாகும்.

Volare என்ற சொல்லுக்கு பறக்க வை (To Fly) என்பது பொருளாகும். பறக்கவைப்பதற்காக உயர்த்தி