பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தாங்கள் வைத்திருக்கும் திறன்களை பலர் அறிய வெளிப்படுத்திக் காட்டுவதைக் குறிக்கும் சொல்லாகவே இது பயன்படுத்தப்பட்டது.

சிற்பிகள் அல்லது ஒவியர்கள் தாங்கள் செதுக்கிய அல்லது தீட்டிய சிலைகளையும், ஒவியங்களையும் பலரிடம் காட்டிடச் செய்கின்ற செயலே Exhibeo என்று அழைக்கப்பட்டது.

விளையாட்டுத்துறையில், திறன்களை ஒரிடத்தில் தேக்கி வைத்துக் காட்ட முடியாதல்லவா! அதனால், விளையாடுவதன் மூலமாகத் தாங்கள் திறன்களையும், தேர்ச்சி பெற்ற வித்தைகளையும் வெளிக் கொணர்ந்து காட்டிட விழைந்தார்கள்.

அதனால் காட்சிப் போட்டியைத்தான் விளையாட்டுத் துறையாளர்களால் அமைக்க முடிந்தது. காட்ட முடிந்தது.

ஆனால், உண்மையான போட்டி என்றால், வீரர்கள் ஒரு விதக் கட்டுப்பாட்டுக்கும், வெற்றி பெறவேண்டுமென்ற ஆர்வத்திற்கும் உட்பட்டு திறமைகளை வெளிக்காட்ட ஆடிடும் அதே சமயத்தில், காட்சிப் போட்டி என்கிற சமயத்தில், கன்னாபின்னா என்று ஆடி, பார்வையாளர்களை எரிச்சல் படுத்தி விடுவதும் உண்டு.

ஆகவேதான் Exhibition என்ற சொல்லானது, விளையாட்டுத் துறையுடன் அதிக ஒட்டுறவு இல்லாமல், விலகி இருப்பது போலவே தோற்றமளிக்கிறது.