பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்

6




விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்


சிறு விளக்கம்:

ஆங்கிலம் அறிந்தவர்களே விளையாட்டுக்களைப் பற்றி அதிகம் புரிந்து கொள்ள முடியும் என்ற நிலையிருந்த காலமும் இருந்தது. அந்த இன்னிலை மாறி, 'எல்லாம் தமிழில்' என்ற இனிய நிலைக்கு மாற்றம் பெற்று ஏற்ற முற்றிருக்கும் நாளில் வாழ்கிறோம் நாம்.

தமிழ்த் தாயின் தளிர் பாதங்களுக்குக் காணிக்கையாகவும், தமிழ் கூறும் நல்லுலக மக்களுக்குப் பயன்படும் பரிசாகவும், ஒவ்வொரு விளையாட்டைப் பற்றியும் ஒவ்வொரு நூலாக இப்பொழுது வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

விளையாட்டுக்களில் ஒரு சில சொற்களை அடிக்கடி நாம் நம்மையறியாமலேயே பயன் படுத்திக் கொண்டு வருகிறோம். விளையாடி மகிழ்வதற்கும், விளையாட்டுக்களை நடத்துவதற்கும் மிக இன்றியமையாதனவாக பல சொற்கள் நடை முறையில் இருக்கின்றன. ஆங்கிலம் அறியாதாரும், அவற்றை அழகாகச் சொல்லவும் பயன்படுத்தவும் நாம் கேட்டிருக்கின்றோம்.

அத்தகைய முக்கியமான சொற்களையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்பொழுது, ஒவ்வொரு சொல்லும்